வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன்: எழுந்துள்ள சர்ச்சையால் குழப்பத்தில் பொலிஸார்

இரத்தினபுரி, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் சோடிக்கப்பட்ட கதை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரிடம் சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அது புனையப்பட்ட கதையாக இருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த16 ஆம் திகதி மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக குறித்த சிறுவன் தனது சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சுமார் 100 மீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற பின்னர் அவரது சைக்கிளில் இருந்த சங்கிலி அறுந்து போனதாகவும் கூறப்படுகிறது. அதனை சரிசெய்து சுமார் 700 மீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி சென்ற போது இறப்பர் தோட்டத்திற்கு அருகில் ஒரு வெள்ளை வேனில் தான் கடத்தப்பட்டதாக, சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சைக்கிளுடன் வேனில் தன்னை கடத்திச் சென்றதாகவும் சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு பெட்டிக்கடையை கடந்து வாகனம் நின்றவுடன் தான் அதில் இருந்து குதித்து தப்பிச் சென்றதாக மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயம் சிறுவனால் பொய்யான வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!