முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் மர்மமான முறையில் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பாக மூன்று இராணுவத்தினர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினமும் (18) சந்தேகத்தின் பேரில் இராணுவம் ஒருவர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் நால்வரும் இன்றையதினம் (19) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தனர்.

அணிவகுப்புடன் ஆரம்பமான குறித்த வழக்கு விசாரணையானது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகளான கெங்காதரன் ,சுபா
தனஞ்சயன் மற்றும் ஏனைய சடட்டத்தரணி குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்திற்கு பிணை வழங்க கூடாது என வாதிட்டிருந்தனர். தொடர்ந்து சந்தேக நபர் நால்வரையும் 26.08.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தவிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!