இரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி!

கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார்.

ஆறு வயதுக்குட்பட்ட பிரிவில் ஐந்து வயதான இந்தச் சிறுமி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று(28) இடம்பெற்றது.

இவரது இந்தச் சாதனை “ராபா உலக சாதனை” புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாதனை நிகழ்வில் நடுவர்களாக, “ராபா உலக சாதனை” புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், “ராபா உலக சாதனை” புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

சாதனையின் பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரனால், “உலக நாட்டிய இளவரசி” என மகுடம் சூட்டி சிறுமி ரஜீவன் கம்சத்வனி கெளரவிக்கப்பட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!