யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்: மனைவி மற்றும் மைத்துனருக்கு கணவன் கத்திக்குத்து!

நேற்றையதினம்(27) யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்றையதினம்(27) வழக்குக்காக குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களை வீதியில் இழுத்து விழுத்திய கணவன், மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டார்.

இதன்போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சந்தேகநபரான கணவனை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது சகோதரனே தன்னிடமிருந்து பிரித்ததாக கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!