யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் கைது!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலக்கத் தகடு இன்றி பயணித்த சிற்றூந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவர் காவல்துறையினருக்கு கையூட்டல் வழங்க முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!