ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர்: நேர்ந்த துயரம்

பதுளையில் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்டி – பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடி மெணிக்கே ரயிலில் பயணித்துள்ளார்.

இந் நிலையில், பண்டாரவளை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதற்கு முன்னரே ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!