லிவர்பூலில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், அடையாள உணவு தவிர்ப்பு விழிப்புணர்வுப் போராட்டமும் கடந்த சனிக்கிழமை 26/09/2026 லிவர்பூலில் நடைபெற்றது.

மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றினர்.

நிகழ்வின் ஆரம்பமாக, பிரித்தானியக் கொடியை Harrow Headstone Councillor மற்றும் முனைவர் அருணாசலம் இராஜலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடியை தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் லிவர்பூல் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கோபிநாத் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பொதுச்சுடரை தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரை ராசசிங்கம் ருசா அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து, தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் பெண்கள் பொறுப்பாளர்களான நகுலினி மற்றும் கெம்டி ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.

அதன் பின்னர், தமிழீழ காவலர் அணியின் பொறுப்பாளர் மொகமட் நுஸ்கி அவர்கள் மலர் வணக்கத்தையும் தீப வணக்கத்தையும் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து, தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வணக்கமும் தீப வணக்கமும் செலுத்தி தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவுகூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

நிகழ்வின் அடுத்த கட்டமாக, பலர் தியாக தீபம் திலீபன் அவர்களின் தியாகத்தையும் நினைவுகளையும் எடுத்துரைத்து கவிதைகள் மற்றும் நினைவுரைகளை வழங்கினர்.

தொடர்ந்து, தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களும், Harrow Headstone Councillor மற்றும் முனைவர் அருணாசலம் இராஜலிங்கம் அவர்களும் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபன் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் அனுஷ்டிக்கப்பட்டது.

இறுதியாக, கொடி கையேற்புடன், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒலிக்க, “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் தியாகத்தையும், தமிழர் உரிமைகள் மற்றும் சுயநிர்ணயத்திற்கான அவருடைய அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!