பறவை மோதியதால் அவசர நிலை: கட்டுநாயக்கவில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கிய துருக்கி விமானம்!

கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

TK-731 என்ற இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்காக நீர்கொழும்பு களப்பிற்கு அருகில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏ330 (A330) ரகத்தைச் சேர்ந்த இந்த அகலமான உடல் அமைப்பைக் கொண்ட பயணிகள் விமானம், இன்று காலை 10:24 மணிக்குத் தரையிறக்கப்பட்டது.

இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக விமான நிலைய நிர்வாகத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!