ஈரானுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு!

ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் விசேட தூதூவர் Steve Witkoff தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த வாரம் சந்திப்புகள் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம், நிச்சயமாக அதற்காக நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று விசேட தூதூவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு தெஹ்ரானிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், “எங்களிடம் 15 அம்சத் திட்டம் உள்ளதுடன், ஈரானியர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது அனைத்தையும் தீர்க்கக்கூடும்,” என்று தெரிவித்தார்.

ஈரான் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அனுமதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதை Witkoff உறுதிப்படுத்தினார்.

“கப்பல்கள் கடந்து செல்கின்றன, இது ஒரு நல்ல அறிகுறியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஈரான் மீதான கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும், வரும் வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார். மியாமிக்கு வருகை தந்தபோதும் அவர் அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

ஈரான் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், நாமும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விரும்புகிறார்கள், என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!