ஈரான் கப்பலில் ஆபத்தான இரசாயனங்கள்:அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கா கைப்பற்றியிருந்த ஈரான் கப்பலில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

‘MV Touska’ என்ற ஈரானிய சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை ஏப்ரல் 18 அன்று சிறைப்பிடித்திருந்தது.

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவரான நிக்கி ஹேலி, இந்த கப்பல் சீனாவிலிருந்து ஈரான் நோக்கிச்சென்றதாகவும், அதில் ஏவுகணைகளுக்கான வேதிப்பொருட்கள் இருந்ததாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் இந்த கப்பலில் இருந்த இரசாயனங்களை ‘Dual-use’என குறிப்பிடுகின்றனர். இவை உரம் தயாரிப்பதற்கோ அல்லது பெயிண்ட் தொழிற்சாலைகளுக்கோ பயன்படுத்தப்படலாம் என்றும், இவற்றைச் சுத்திகரிப்பதன் மூலம் ஏவுகணைகளுக்கான வெடிபொருட்களாகவும் மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில், அம்மோனியம் பெர்குளோரேட், ஹைட்ராசின் மற்றம் பாலீமர்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதில், ஹைட்ராசின் என்பது திரவ எரிபொருள் ஏவுகணைகளில் உந்துசக்தியாகப் பயன்படுத்தப்படும் இரசாயன வகை என்றும் கூறப்படுகின்றது.

ஈரான், சாதாரண மக்கள் பயன்பாட்டுக்காக இந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறிக்கொண்டு, சீனாவின் உதவியுடன் மறைமுகமாகத் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை வலுப்படுத்துகிறது என்று நிக்கி ஹேலியின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஈரான் இதனை முழுமையாக மறுத்துள்ளதுடன், கப்பலில் வந்த சரக்கு அனைத்தும் தொழில்துறை சார்ந்த மூலப்பொருட்கள் மட்டுமே என்று விளக்களித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!