அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் இருவர் சாதனை படைத்து விருதினைப் பெற்றுள்ளதுடன், அபுதாபியில் நடைபெறவுள்ள வேல்ட் சம்பியன் சிப் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் 16 – 17 வயது பிரிவில் செல்வி.ஜெசுவா ஜெசிதாஸ், 12 – 13 வயது பிரிவில் செல்வி டர்சிகா தச்சணாமூர்த்தி ஆகியோர் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற முய் தாய் போட்டிகளில் (தாய் கிக் பாக்ஸிங்) பங்கு பற்றி தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளனர்.

குறித்த மாணவிகளை கௌவிக்கும் நிகழ்வு பாடசாலயில் இன்று (07.08) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி ஞானமதி மோகனதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவிகள் பான்ட் வாத்திய அணி வகுபபுடன் வரழைக்கப்பட்டு அவர்களுக்கு மாலை அணிவித்தும், பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த மாணவிகள் எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அபுதாபியில் இடம்பெறும் மும் தாய் வேல்ட் சம்பியன் சிப் போட்டியிலும் இலங்கை சார்பாக பங்குபெற்றவுள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி மோ.ஞானமதி ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது,
எமது பாடசாலையிலிருந்து அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்ட விருதுகளை செல்வி. ஜெசுவா ஜெசிதாஸ், செல்வி டர்சிகா தச்சணாமூர்த்தி ஆகியோர் பெற்றுள்ளதுடன், எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் 11 தொடக்கம் 20 ஆம் திகதி வரை அபுதாபியில் நடைபெறவிருக்கும் ஐஎம்எப்ஏ மும்தாய் வேல்ட் சம்பியன் சிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
எனினும் குறிப்பிட்ட இரு மாணவிகளும் பொருளாதார ரீதியான இடர்பாடுள்ளவர்கள். இவர்கள் இப்போட்டியில் பங்கு கொள்வதானால் இவர்களது விளையாட்டுத் துறை சார்ந்த எதிர்காலம் சிறப்பாக அமைவதுடன், எமது கல்லூரிக்கும், மாவட்டத்திற்கும் மாத்திரமன்றி நாட்டிற்க்கும் கீர்த்தி உண்டாகும். இவர்கள் இப்போட்டியில் பங்கு கொள்வதாயின் இவர்களுக்கான செலவு தலா ஐந்து இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருவருக்கும் ரூபாய் 11 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது.


எனவே, இவர்களது பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு இவர்கள் இருவருக்கும் இப் போட்டியில் பங்கு கொள்ள ஏதுவாக மேற்படி நிதி அனுசரணை வழங்கி இம் மாணவிகளின் சாதனைப் பயணத்திற்கு உதவ வேண்டும் என நல் உள்ளங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். இவ் உதவி தொடர்பாக கல்லூரி அதிபராகிய என்னுடனோ அல்லது உடற்கல்வி ஆசிரியர் சுந்தராங்கன் ஆசிரியருடனோ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.