வீதியால் சென்று கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காரை நிறுத்தி விட்டு மக்களுக்கு “ஹாய்” சொல்லி சகஜமாக உரையாடிய நெகிழ்ச்சிச் செயல் தற்போது வைரலாகி வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

அவரின் யாழ்.விஜயத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் அவரது பெயர் பொறிக்கப்படாத பெயர்ப்பலகையுடனேயே திறப்பு விழா நடைபெற்றது.
எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறானதொரு செயலை செயற்படுத்தாத வேளையில் அநுர இவ்வாறு பெருந்தன்மை இல்லாமல் செயற்பட்டமை பல்வேறு வகையில் பேசுபொருளாகியது.
இந்த நிலையில் தற்போது அவர் சென்றுகொண்டிருந்த போது வீதியோரங்களில் மக்கள் நின்று கொண்டிருந்தததை அவதானித்த வேளை, உடனே காரை நிறுத்தி மக்களுக்கு ஹாய் சொல்லி அவர்களுடன் பேசியுள்ளார்.
இந்தச் சம்பவமும் தான் ஒரு ஜனாதிபதி அல்லாது சக மனிதர் என்ற ரீதியில் மக்களுடன் மக்களாக சகஜமாக உரையாடியுள்ளார்.
ஜனாதிபதியின் அடுத்தடுத்த நெகிழ்ச்சிச் சம்பவங்கள் வெளியாகி வைரலாகியுள்ளதுடன் பலரையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவர்ந்துள்ளார்.
இதேவேளை – செம்மணி மனிதபுதைகுழிப் பகுதிக்கு அநுர செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அங்கு செல்லாமல் சென்றது பலரையும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.