
பல்வேறு காரணங்களால், குறிப்பாக பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாதபோது, பலரும் சிறுநீரை அடக்கும் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். இந்த ஒரு வழக்கம் தான், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்துடன் இருக்கிறது.
மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது, சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் சிறுநீர்ப்பையின் தசைகள் பாதிக்கப்படுவதோடு, பாக்டீரியாக்கள் வளர்வதற்கும் வழிவகுக்கும். இது தொடர்ந்து யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் நேரிடும் என்றும், இடுப்பு வலி, தசை வலி, தலைவலி உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு காரணமாகிறது. சிறுநீரக பாதை தொற்று மட்டுமல்ல, சிறுநீரக தொற்றுகளுக்கும் இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் பாரம்பரிய கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்த சுத்தம் குறித்த பயத்தை தவிர்த்து, உடலை பாதுகாக்க சிறுநீரை அடக்காத பழக்கத்தை உருவாக்க வேண்டும்.