பழிவாங்கும் நோக்குடன் அநுர அரசு செயற்படுவதாக விமல் வீரவன்ச பகிரங்கம்!

புதிய இணைப்பு: கொள்கலன்களை விடுவித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் அது தொடர்பில் கருத்து தெரிவித்தவரிடம் விசாரணை நடத்துவது பழிவாங்கும் நோக்கத்திலாகும் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சோதனைக்குட்படுத்தாமல் சுங்கப்பிரிவினர் விடுவித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 223 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு அழைத்துள்ளனர்.

இந்த அரசாங்கம் பழிவாங்குவதை தவிர வேறு எதை செய்கிறது. இந்த அரசு பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளது.
சுங்க வரி அறவிடலாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது, இது அநியாயமாகும்.

இன்று நாட்டில் அங்காங்கே வெடிக்கும் போதைபொருள் துப்பாக்கி வேட்டுக்கள் அந்த கொள்கலன்களில் இருந்திக்கலாம்.

அரசுக்கு பொருளாதார பிரச்சினை தொடர்பில் துளி அளவும் அக்கறை கொள்லாமல் இவ்வாறு தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என குறிப்பிட்டார்.

முதலாம் இணைப்பு :தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று (09) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் CID-யில் முன்னிலையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொள்கலன்கள் தொடர்பான சுங்க மோசடி சம்பவம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக தரப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டு வருகிறது.

விமல் வீரவன்ச தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!