யோஷிதா, டெய்சி போரஸ்ட்டிற்கு எதிரான பணமோசடி வழக்கு நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 3 ஆம் திகதி முன் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதி யோஷித ராஜபக்ஷ வழக்கு விசாரணைக்கு இன்று (28) அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இரண்டாவது பிரதிவாதியான டெய்சி போரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சில்வா, நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நீதிபதி, இந்த வழக்கை நவம்பர் 3 ஆம் திகதி விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

சுமார் 57 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை 3 வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, யோஷிதா ராஜபக்ஷ மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!