“அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?” – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!

நல்லூரில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை பொலிஸார் உடைத்து எடுத்துச் சென்றமை அரசின் தமிழ் மக்கள் மீதான கோர முகத்தின் வழிபாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்னால் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகிம்சை வழியில் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரை நீர்த்த ஒரு தியாக தீபத்தின் திருவுருவாச்சிலையை காவல்துறை அகற்றியது தமிழின அடக்குமுறையின் வெளிப்பாடு.

தமிழ் மக்கள் மீது காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளின் வெளிப்பாடாக திலீபனின் உருவச்சிலை காவல்துறையின் உதவியுடன் அடாவடித்தனமாக அகற்றப்பட்டிருக்கிறது.

தியாக தீபத்தின் உருவச்சிலை வைக்கப்பட்ட நாட்களில் நாட்டில் எந்தவிதமான அமைதிக்கும் தேசிய பாதுகாப்புக்கும் குந்தகம் இல்லாமல் வழிபாடுகள் இடம் பெற்று வந்த நிலையில் காவல்துறையால் சிலை அகற்றப்பட்டமை அரசின் தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற கோர முகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்.

யாழிற்கு வருகை தரும் சிங்கள மக்கள் பலர் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டு வரும் நிலையில் அவசரமாக சிலையை அகற்ற வேண்டிய காரணம் என்ன.

ஆகவே தியாக தீபத்தின் உருவச்சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை இணை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!