எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரிலிய சவிய வங்கிக் கணக்கு மோசடி மற்றும் விளையாட்டு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற பேருந்துகள் இரண்டை முறைகேடான வழியில் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறுவர் முன்பள்ளிக்குப் பெற்றுக் கொண்டமை போன்ற செயற்பாடுகள் குறித்து பொலிஸ் நிதி மோசடி பிரிவு ஷிரந்திக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக ஷிரந்திக்கு முதலில் அழைப்பாணை வழங்கப்பட்டபோது வேறொரு தினத்தை மாற்றித் தருமாறு அவர் கேட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இம்மாதம் 24ம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பாணையைப் பெற முன்னதாக ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ காரணங்களை முன்வைத்து வெளிநாடு செல்ல முயன்ற போதும், சிங்கப்பூர் விமானத்தில் ஏற முன்பதாக அவருக்கு அழைப்பாணை கையளிக்கப்பட்டது.

எனினும் கடந்த 24ம் திகதி ஷிரந்தி ராஜபக்ச விசாரணைகளுக்காக முன்னிலையாகவில்லை.

இந்நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையொன்றைப் பெற்றுக் கொள்ள பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

பொலிசாரின் தாமத செயற்பாடு குறித்து நீதித்துறை வட்டாரத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!