1.6 கோடி அமெரிக்கர்களை அச்சுறுத்தும் டிரம்ப் – கடுமையாக கூறிய பரக் ஒபாமா

ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த ‘பிக் பியூட்டிபுல்’ வரிக்குறைப்பு சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலத்திற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரிக்குறைப்பிற்குப் பின் நிதி ஆதாரத்தை திரட்டும் நோக்கில், Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் புதிய சட்டமூலத்தை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டமூலத்தை விமர்சித்து, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா தனது X (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“மருத்துவ உதவிக்கான நிதியை குறைத்து, மலிவான சுகாதார பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் மூலம், டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி 1.6 கோடி அமெரிக்கர்களின் சுகாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகள் கடுமையாக பாதிக்கப்படும். இன்றே உங்கள் பிரதிநிதியை தொடர்பு கொண்டு, இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு வலியுறுத்துங்கள்.”

இதையும் வாசிக்க –

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!