பெர்லின் – ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்தனர். இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) மாலை ஜேர்மனி நேரப்படி 6.10 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தின்போது ரயிலில் சுமார் 100 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை மற்றும் அவர்களது நிலைமை குறித்து கூடுதல் தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Several people were killed and injured after a passenger train derailed in the Biberach district of Baden-Württemberg, Germany .
— GeoTechWar (@geotechwar) July 27, 2025
A mass casualty event has been declared, and rescue operations are underway . #Zugunglück pic.twitter.com/CICNe1Sv9Z
இவ்விபத்து தொடர்ச்சியாக ஜேர்மனியின் ரயில் உள்கட்டமைப்பு மீதான விமர்சனங்களை தூண்டியுள்ளது. ரயில் சேவைகள் அடிக்கடி தடைபடுவது, தொழில்நுட்பக் கோளாறுகள் ஆகியவை பயணிகளுக்கு பெரும் சிக்கல்களைக் ஏற்படுத்தி வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

ஜேர்மனியின் பழைய உள்கட்டமைப்பை புதுப்பிக்க பல பில்லியன் யூரோ செலவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜேர்மனியப் பிரதமர் ஃபிரேட்ரிக் மெர்ஸ் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.