சவுதியில் பேருந்தும் டீசல் பாரவூர்தியும் மோதி விபத்திற்குள்ளானதில் 42 இந்தியர்கள் பலியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் பாரவூர்தி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
