🔴 UPDATE அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை

புதிய இணைப்பு

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

4 ஆம் இணைப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்!.

ஏர் இந்தியா விமான விபத்தில் 11A-வில் அமர்ந்திருந்த 38 வயதுடைய ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் ரமேஷ் விஸ்வாஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் அவசரகால வெளியேற்றத்திலிருந்து வெளியே குதித்துள்ளார்.

இதே வேளை விமானம் விபத்துக்குள்ளானதில் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியிலிருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆம் இணைப்பு

முதற்கட்டமாக விபத்தில் 133 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியானது. அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக தற்போதுவரை 170 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படியான பதற்றமான சூழலில், தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​யாராவது உயிர் பிழைத்தார்களா என்று சொல்வது கடினம் என அகமதாபாத் காவல் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அகமதாபாத் காவல் துறை அதிகாரி  ஞானேந்திர சிங் மாலிக் பேசும்போது ” விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது சூழ்நிலையை வைத்து பார்க்கையில் யாராவது உயிர் பிழைத்தார்களா என்று சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால்,இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது

2 ஆம் இணைப்பு

குஜராத் – அகமதாபாத் இல் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் தற்பொது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில், 3.19 மணிக்கு ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் பயணித்த பயணிகள் தொடர்பில் தகவல் வெயியிடப்பட்டுள்ளது.

அதன்படி போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது.

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், எனவும் 53 பேர் பிரித்தானிய நாட்டவர்கள்எனவும் 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகேய நாட்டவர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 ஆம் இணைப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மேகனி நகரில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 1.7 மணி அளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா AI 171 எனவும், இந்த விமானத்தின் மொத்த இருக்கைகள் எண்ணிக்கை 242 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சடலங்கள் தூக்கி செல்லப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் வாசிக்க –

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!