ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகர்

தென்னிந்தியாவின் பயங்கர வில்லன் நடிகராக இருந்தவர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ். திருப்பாச்சி, கோ, சாமி என பல படங்களில் வில்லனாக இருந்த இவர், இப்போது திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை.

இவர், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பயங்கர வில்லன் நடிகராக வலம் வந்தவர், கோட்டா சீனிவாச ராவ்.

1978ல் தெலுங்கு மொழியில் அறிமுகமான இவர், அதன் பிறகு தொடர்ந்து பல மாஸ் ஹீரோக்களுக்கு வில்லனாக படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவரை பெரிதும் பிரபலப்படுத்திய படம், சாமி. இந்த படத்தில் அவர் பெருமாள் பிச்சை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு பெருமாள், லாடம், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காமெடி கதாப்பாத்திரதிலும் நடித்திருந்தார்.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ்விற்கு, 82 வயதாகிறது. இதனால், அவர் திரையுலகில் இருந்து விலகியே இருக்கிறார். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் கடைசியாக தெலுங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வர்ணசுந்தரி என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ்விற்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். மகன், ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

இதையடுத்து, சமீப காலமாக கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வீட்டிலேயே இருக்கிறார். இதனால் அவரை பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் அவரை வீட்டில் சென்று நேரில் சந்தித்தார்.

இந்த புகைப்படத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், காலில் கட்டுப்போட்டுக்கொண்டு உடலே உருகுலைந்து இருக்கிறார். இதை பார்த்தவர்கள், கிங் மாதிரி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே என்று சிலர் கூறி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!