யாழில் ஆடுகளை திருடிய இருவர் கைது !

யாழில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் வியாழக்கிழமை (12) இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி – தச்சன் தோப்பு பகுதியில் ஆறு ஆடுகள் திருடப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆடு திருட்டு தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்ற வாகனங்களின் இலக்கங்களை பெற்று, அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனமொன்று புத்தளம் மாவட்ட பதிவில் இருந்தமையும், அந்த வாகனத்தை துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கியமையும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார் நெல்லியடி – துன்னாலை பகுதியில் வைத்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், திருடப்பட்ட 5 ஆடுகளை மீட்டதுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேக நபர்களை சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!