🔴 PHOTO யாழில் எரிபொருளுக்கு முண்டியடித்த பொது மக்கள்

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்று திங்கட்கிழமை எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வரிசையில் காத்திருந்தனர்.

குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றனர்.

இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில் – வடக்கு மாகாணத்தில் எரிபொருள் இருப்பில் இருக்கின்றது. எரிபொருள் நிரப்பு நில்சியங்கள் வழமைபோன்று செயற்பட்டு எரிபொருள் விநியோகத்தை செற்கொண்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று போதியளவு எரிபொருள் இருக்கின்றது. செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்

இதேவேளை மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப்பதற்ற சூழல் எரிபொருளின் விநியோக தளம்பலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாக அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!