அகமதாபாத் விமான விபத்து : இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ஆம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடம் மீது மோதியது.

இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில் விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ராஜூபடேல் என்பவர் தனது குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் கட்டிடம் இடிந்து சிதறி கிடந்த இடிபாடுகளில் இருந்து மொத்தம் 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவற்றையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நகைகள் ஆவணபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!