கெஹலியவின் மற்றுமொரு மகள், மருமகன், மருமகள் இலஞ்ச, ஊழல் விசாரணை.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றுமொரு மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (19) காலை முன்னிலையாகியுள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்று புதன்கிழமை (18) சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!