இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானிய கடற்படையினர்!

வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர், ஒரு விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து IRIS Dena மீட்கப்பட்ட 32 ஈரானியர்கள் இதில் அடங்குதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவர்களுடன் இலங்கையில் தங்கியிருந்த ஈரானியக் கடற்படையின் ஐரிஸ் புஷர் IRIS Bushehr கப்பலைச் சேர்ந்த 208 ஈரானியர்களும் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று இரவு (14) ஒரு சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மெராஜ் ஏர் லைன்ஸின் ஈரான்-09 என்ற சிறப்பு விமானம், நேற்றையதினம்(14) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.

குறித்த விமானத்தில் இந்தக் குழுவிர், நேற்று இரவு சுமார் 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானுக்கு புறப்பட்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!