வெளிநாடு ஒன்றில் விசா அற்றவர்களை தேடி அதிரடி : குறைந்தது தமிழர்களின் நடமாட்டம்!

பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து கைது செய்யும் நோக்கில் 48 மணி நேரத்துக்கான சிறப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கையின் போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் தமிழ் வணிகங்கள் செயல்படும் இடங்களில் கடுமையான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, லா சப்பல் பகுதி மற்றும் அதன் அருகாமையிலுள்ள கார்த் நோட் தொடருந்து நிலையப் பகுதியில் பயணிகள் மீது அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்ல்யூ வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நடவடிக்கையில் 4,000க்கும் அதிகமான அதிகாரிகள் பங்கேற்று, முக்கிய தொடருந்து நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் நகர பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனைகளின் வேகமான செயல்பாடுகள் காரணமாக, பிரான்சில் வதிவிட அனுமதி இல்லாமல் வசிக்கும் தமிழ் குடியேறிகள் தங்களது வெளிவரத்தையும், பொது இடங்களில் நடமாட்டத்தையும் குறைத்து உள்ளனர்.

இதற்குமுன் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் சிறப்பு நடவடிக்கையில் 750க்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது மீண்டும் 48 மணி நேர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!