🔴 PHOTO ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள ஃபோர்டோ மற்றும் பிற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்களை அற்புதமான இராணுவ வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நிறைவு செய்துள்ளோம் என ட்ரம்ப் ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது,

“ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பர்தவின் முக்கிய தளங்கள் மீது முழு அளவில் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.

அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் சமாதானத்திற்கு இணங்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை ஃபோர்டோ தளத்தின் ஒரு பகுதி எதிரி தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் சேதத்தின் அளவை இதுவரை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவின் ஈடுபாடு மிகவும் ஆபத்தாக அமையும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தாக்குதல் – நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!