🔴 PHOTO சாமர்த்தியமாக விபத்தை தடுத்த புகையிரத ஓட்டுனர்!

கலபட மற்றும் வட்டவளை இடையே புகையிரத பாதையில், மரம் ஒன்று புகையிரத பாதையில் முறிந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் புகையிரத ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக புகையிரத சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

நேற்று இரவு சுமார் 7.50 மணியளவில், நிலவும் மோசமான வானிலையின் காரணமாக, கலபட – வட்டவளை இடையே மரம் ஒன்று புகையிரத பாதையில் விழுந்துள்ளது.

அந்த மரத்தை தூரத்தில் கண்ட புகையிரத ஓட்டுநர், சாமர்த்தியமாக புகையிரத்தை நிறுத்தியதனால் பயணிகள் உயிர் பிழைத்தனர். பின்னர், ஓட்டுநரின் வழிகாட்டலின்படி பயணிகள் இணைந்து மரத்தை அகற்றி, புகையிரத பாதையை சீர்செய்தனர்.

இதேவேளை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!