🔴 PHOTO 16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

செம்மணி பகுதியில் இன்றைய தினம் (23) ஆரம்பிக்கப்பட்டுள்ள அணைய தீபம் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி இரணைமடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த கால பகுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி எனது மகனான சுரேந்திரன் சுதாகரனுக்கு யுத்தத்தின் போது காலில் காயம் ஏற்பட்டது.

16ஆம் திகதி வரையில் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் 16ஆம் திகதி பதவியா வைத்தியசாலைக்கு என கப்பலில் அழைத்து செல்லப்பட்டார்.

நாங்கள் வவுனியா முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டோம்.

நாங்கள் முகாமில் இருந்த போதிலும் மகனை பற்றிய தகவல்களை அறிய முற்பட்டும் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

நாம் மீள் குடியேற்றப்பட்டு இரணைமடு பகுதிக்கு வந்த வேளை , பதவியா வைத்திய சாலையில் எமது மகனுக்கு 07 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மகனுடன் 07 நாட்களும் கதைத்ததாகவும், அதன் பின் 08ஆவது நாள் காலையில் மகனை பார்க்க சென்ற வேளை , மகனை காணவில்லை எனவும் இருவர் எம்மிடம் தெரிவித்தனர்.

எனது மகன் வைத்தியசாலையில் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தமைக்கு கண்கண்ட சாட்சியங்கள் உண்டு.

எமது மகனுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த கோரியே 16 வருடங்களாக நாங்கள் போராடி வருகிறோம்.

எனது மகன் வைத்தியசாலையில் உயிருடன் சிகிச்சை பெற்று வந்தமை தொடர்பான தகவல் அறிந்ததும், மனித உரிமை ஆணைக்குழு முதல் வவுனியா யோசப் இராணுவ முகாம் என பல இடங்களில் முறைப்பாடு செய்தும் தேடி அலைந்தும் வருகிறேன்.

“எனது மகனின் உயிருக்கு என்ன ஆனாது ?” என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியே 16 வருடங்களாக போராடி வருகிறேன் என தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது