🔴 PHOTO வெகனார் வாகனத்தில் சென்ற இளைஞன் யுவதி கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550 கிராம் கஞ்சா 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (28.06.2025) இடம்பெற்றுள்ளது.

நீண்ட நாட்களாக போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வெகனார் வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய போது 550 கிராம் கஞ்சா 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்கு லையிற்றர் மற்றும் கண்ணாடி துண்டுடன் இளைஞன், யுவதியும் போதைப்பொருளை பயன்படுத்த உபயோகிக்கப்பட்ட வெகனார் வாகனமும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையிலான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் இளவாலையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் , யுவதி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் நாளையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

செய்தி – பாலநாதன் சதீசன் 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!