🔴 PHOTO கல்லூண்டாயில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றமை உறுதியானது!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் கழிவுப் பொருட்கள் சேமிக்கப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இதற்கு எந்திர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அந்தப் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்தனர். இதனால் மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர் குறித்த பகுதியை பார்வையிடுவதற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள், கல்லூண்டாய் பகுதி சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு மக்கள் குறிப்பிட்டது போன்று ஏராளமான மருத்துவ கழிவுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது. மேலும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் ஒன்றாக கொட்டப்பட்டு இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதே வேளை, யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

செய்தி – பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!