🔴 PHOTO கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை ஏற்றும் பஸ் பாரிய விபத்து -மூவர் படுகாயம்

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை(30) மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம்  பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து கிரான்குளம் சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த வம்மி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்களாகும். விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!