🔴 VIDEO கனடா வருவதற்கு ஆசைப்படுகிறீங்களா? சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட பெண்!

கனடாவில் வசித்து வரும் இந்திய பெண்மணி கனுபிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பதைக் கனவாகக் கருதும் பலருக்கும் இந்த வீடியோ உண்மை நிலையை வெளிக்கொணருகிறது.

கனுபிரியா வெளியிட்ட வீடியோவில், வெறும் 5 அல்லது 6 இடங்களுக்கான வேலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணப்படுகிறது. இது போன்ற போட்டியைக் காட்டிய கனுபிரியா, “இதற்கே தயாராக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இருக்கலாம்” என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தெளிவான குரல், கனடாவில் வேலை பெறுவதின் சவாலான உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த வீடியோ பல நெட்டிசன்களின் அனுபவங்களுடன் ஒத்துபோயுள்ளது. “நான் இருக்கும் நகரத்திலும் இதே நிலைதான்” என்றும், “உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ, கனவான வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம் என்ன என்பதை உணர்த்துகிறது. வேலையைப் பெறும் பயணம் சுலபமல்ல. அதற்காக மனதளவிலும் உடலளவிலும் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. “இது போன்ற நிலை தெரியாமல் கனடா வந்தால் ஏமாற்றம் தான் என உணர்த்தும் வகையில் இந்த வீடியோ அமைன்துள்ளது.

https://web.facebook.com/a7tvnewsFace book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

4a74721c-af45-4109-8724-6bf0e016b9bb
தங்க நகைகள், பணத்திற்காக முன்னாள் ஊழியரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!
selva
மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை - வெளிவந்த புதிய தகவல்
india-crime
கொடுமை தாங்க முடியல அப்பா - திருமணமான 78 நாளில் பெண் தற்கொலை - வெளிவந்த ஆடியோ பதிவு
74d3dc27-eaae-43e0-9434-2a577be964f5
குறி சொல்லும் கோவிலில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் - வெளியாகிய காரணம்!
chemmani
உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை செம்மணி புதைகுழி இவ்வுலகிற்கு அம்பலப்படுத்தி விட்டது - இயக்குனர் ஆதங்கம்!
chemmani
செம்மணி புதைகுழியை நோட்டமிடும் மர்ம வாகனம்!