
பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி பட வெற்றிக்குப் பிறகு, இன்னும் சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகுவதாகவும் அஜித் கூறியிருந்தார்.
இதையடுத்து, மொட்டை அடித்தது போன்ற புது கெட்டப்பில் இருக்கும் அஜித், கார் ரேஸில் மும்முரம் காட்டி வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ajith Kumar Racing is proud and thrilled to announce that our teammates, Fabian and Mathieu, finished first in the prestigious CrowdStrike Spa GT3 Championship in the Pro-Am category. It was a very tough race, but what champions they are! Hearty congratulations to them. pic.twitter.com/nzXZGPVNQ6
— Ajithkumar Racing (@Akracingoffl) June 30, 2025
இந்த நிலையில், பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இது குறித்து அஜித் குமார் ரேஸ் அணி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘எங்கள் அணியின் பேபியன், மேதியூ அடங்கிய குழுவினர், மிகவும் கடினமான போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,’ என்று குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.