முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிபுரிந்த 68 வயதுடைய பணிப்பெண் ஒருவர் லிப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு வெளியே அமைந்துள்ள லிப்டில் தரை தளத்திலிருந்து மேல் தளத்திற்குச் செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் தனது தலையை வெளியே நீட்டியவாறு சென்றதால், கொன்கிரீட் தூணில் தலை மோதி இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.