பாடசாலை வகுப்பறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அதிகளவான பாம்புக் குட்டிகள்!

பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர்.

பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?