இலங்கை மீதான 30 சதவீத வரியை குறைத்த ட்ரம்ப் : வெளியான அறிவிப்பு

2025 ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது. 

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35% இலிருந்து 20% ஆகவும், பாகிஸ்தானுக்கு 30% இலிருந்து 19% ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி வீதம் 27% ஆகவே நீடிக்கிறது. இது மாற்றப்படவில்லை. 

மேலும், பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட 50% வரி வீதம் 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்படும் வரி வீதம் 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

குறைக்கப்பட்ட வரி வீதங்களில் மிக உயர்ந்த வீதமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்படுகிறது. அதேவேளை லாவோஸ் மற்றும் மியான்மாருக்கு தலா 40% வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

விடயம்விவரம்
புதிய வரிவிகிதம்20%
பழைய வரிவிகிதம்44% → 30% → 20%
அமலுக்கு வரும் தேதி2025 ஆகஸ்ட் 7
பாதிக்கப்படும் பொருட்கள்ஆடைகள், தேயிலை, உற்பத்தி சாதனங்கள்
ஏற்புடைய நன்மைஇலங்கை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!