ஈழத்தமிழினம் என்றல்ல எந்தவொரு தேசிய இனமும் தமது முன்னோர்களின் தியாகத்தை கொச்சப்படுத்த அனுமதிப்பதில்லை. அந்தவகையில் பிரான்சின் மாவீரர் பொதுச்சுடரில் குடியேறி ஒருவர் சிகரட் ஒன்றை பற்றவைக்க நெருப்பு எடுத்த சம்பவம் பிரெஞ்சு மக்களிடம் கொந்தளிப்பையும் கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் உலகப் போரில் பிரான்சுக்காக மரணித்த வீரர்களின் நினைவாக தலைநகர் பரிஸில் முக்கிய பிரமாண்ட அடையாளமாக உள்ள ஆர்க் து றியோம்ப் (Arc de Triomphe) எனப்படும் முகமறியா போர்வீரர்களின் நினைவிடத்தில் எரியும் மாவீரர் பொதுச்சுடரில் மொரோக்கோ நாட்டைசேர்ந்த ஒருவர் சிகரட்டை பற்ற வைத்த சம்பவம் பிரெஞ்சு மக்களிடம் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1923 ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி முதல் முதலாக ஏற்றப்பட்ட இந்தச் சுடர் 100 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை ஒவ்வொரு நாள் மாலையிலும் சம்பிரதாயமாக ஏற்றப்பட்டு தொடர்ந்தும் அணையாமல் எரிந்தபடி இருப்பது வழமை.
In France 🇫🇷, a man walks on the Tomb of the Unknown Soldier and uses the flame to light his cigarette.
— Daniel Foubert 🇫🇷🇵🇱 (@Arrogance_0024) August 5, 2025
No one reacts. No police. No army.
France has become a doormat.pic.twitter.com/GgUR3DMowS
அத்துடன், பிரான்சுக்கு வரும் உல்லாசப்பயணிகள் உட்பட் பலர் தினசரி இந்த இடத்தை பார்வையிடுவர்.
இந்த நினைவிடத்தில் ஒவ்வொருநாள் மாலையும் பிரான்சிற்காக வீரமரணம் அடைந்தவர்களுக்கு முன்னாள் படையினர் நினைவேந்தல் நிகழ்வை நடத்தும் நிலையில் இந்த சுடரில் ஒருவர் சிகரட் பற்றவைத்த சம்பவம் பிரெஞ்சு மக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.
பிரான்சின் சுதந்திரத்திற்காக உதிரம் சிந்திய வீரர்களை அவமதிக்கும் இவ்வாறான செயல் தேசத்திற்கு அவமானத்தை தரும் செய்கை எனவும் கண்டனங்கள் வலுத்துள்ளன.
நேற்றுமாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செயலை கண்டனம் செய்த உள்துறை அமைச்சர் உட்பட்ட அமைச்சர்கள் மாவீரர் நினைவுச் சுடரை அவமதித்த குறித்த நபர் தண்டனையின்றி தப்பிக்க முடியாது என்றும் இந்த வெட்கக்கேடான மற்றும் இழிவான செயலுக்கு அவர் பொறுப்புக்கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர், காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது தனது செய்கையை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பத்தை வெளிநாட்டை சேர்ந்த ஒரு உல்லாசப்பயணி காணொளியாக எடுத்தபின்னர் அது சமூக வலை தளங்களில் தீவிரமாக பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.