யாழில் 16 வயது மாணவியை பலியெடுத்த மர்மக் காய்ச்சல்: நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் நேற்று அதிகாலை (08) உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார்.

தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!