உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார்.
உக்ரைன் ரஸ்யா செய்த விடயங்களிற்காக அந்த நாட்டிற்கு எந்த வெகுமானங்களையும் வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனியர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிற்கு வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய உக்ரைன் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சில நிலங்களை கையளி;க்கவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ரஸ்ய உக்ரைன் மோதலிற்கு தீர்வை காண்பதற்கா 15ம் திகதி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.