உலகத்தின் பல மூலைகளில் திருமண வழக்கங்கள் தனித்துவமாக இருக்கும் நிலையில், பல்கேரியாவில் நடைபெறும் மணமகள் சந்தை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏழை பெண்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த சந்தை, பழமையான மரபின் பெயரில் இன்றும் தொடர்கிறது.

பல்கேரியாவில் வருடந்தோறும் நடைபெறும் இந்த மணமகள் சந்தையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் தங்கள் மகள்களை கொண்டு வந்து, ஆண்களுக்கு விற்கின்றனர். வாங்குபவர்கள் பெண்களைத் தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட விலை கொடுத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்த சந்தையில் பெண்களை வாங்கும் ஆண் அதே சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், விற்கப்படும் பெண் ஏழையாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்து குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டும்.
ரோமா சமூகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த நடைமுறை, ‘மரபு’ எனக் கருதப்படுகிறது. ஆனால், பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் காரணமாக இது உலகளாவிய அளவில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.