இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலர் ஆபத்தான நிலையில்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கோர விபத்தில் சிக்கி 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த 22 பேர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!