தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

2002 முதல், யு.என்.எச்.சீ.ஆர் ,18,643 இலங்கை தமிழர்களை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

இந்தநிலையில் குடியேற்ற விதிகளை மீறியதற்காக, அகதிகள் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இலங்கை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் வரை, அவர்களை திருப்பி அனுப்பும் திட்டங்கள் முன்னெடுக்கப்படாது என்று யுன்.என்.எச்.சீ.ஆர் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!