வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, நபர் ஒருவர் தெரு விளக்கு கம்பத்தின் மேல் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (20.08.2025) பேலியகொடயில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர், குறித்த நபரை அதிகாரிகள் மின்கம்பத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து, பொலிசார் குறித்த நபரை தெரு விளக்கு கம்பத்திலிருந்து இறக்கிப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த குறித்த பொதுமகன், தனது மூன்று பிள்ளைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக, தனது மனைவியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வருமாறு வலியுறுத்தி தெரு விளக்கு கம்பத்தின் மேல் ஏறியதாகத் தெரிவித்துள்ளார்.