குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தொடர்பான உத்தரவை கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர வழங்கியுள்ளார்.
நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை சமர்ப்பித்தார். மேலும், விசாரணை இன்னும் நிறைவடையாததால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினார்.

இதற்கிடையில், சந்தேக நபரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன, சாட்சியங்களை முன்வைத்து, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சாட்சியங்களை பரிசீலித்த பிறகு, நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, வரும் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.