பிரித்தானியாவில் இலங்கை யுவதி கொலை: இலங்கையை சேர்ந்த இளைஞன் மீது குற்றச்சாட்டு !

இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கொலை தொடர்பில், 37 வயது இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 7:37 மணியளவில் கார்டிஃப் நகரின் சவுத் மோர்கன் பிளேஸ் (South Morgan Place) என்ற இடத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெற்கு வேல்ஸ் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 32 வயதான நிவுன்ஹெல்லகே டோனா நிரோதா கலப்னி நிவுன்ஹெல்ல (Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) என்ற பெண்ணை உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்டனர்.

நிரோதா என அழைக்கப்பட்ட குறித்த பெண்ணை நன்கு அறிந்திருந்த திசர வெரகலகே (Thisara Weragalage) என்ற 37 வயதுடைய இலங்கை இளைஞன், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சீவோல் ரோட் (Seawall Road) பகுதியில் வைத்து பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கார்டிஃப் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது சவுத் மோர்கன் பிளேஸ் அல்லது சீவோல் வீதி பகுதியில் சாம்பல் நிற ஃபோர்ட் ஃபியஸ்டா (Ford Fiesta) காரைக் கண்டவர்கள், அது பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்