இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு தம்பதியினர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள புகைப்படமொன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னர் காணப்படும் வீதி சமிக்ஞையில் முன்னால் யானைகள் வரும் என்று விளக்கமளிக்கும் குறியீடு உள்ளது.
இதுபோன்ற குறியீட்டை நாம் உலகில் வேறு எங்கும் கண்டதில்லை என அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த ஆண்டு இதுவரை 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,604,018 என அதிகார சபை தெரிவித்துள்ளது.