கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக மூன்று சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கோனகங்கார மற்றும் பொரளைப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் ஆவர்.
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி, ஒரு பெண் சந்தேக நபர் ரூ. 3,831,000 மற்றும் ரூ. 3,436,000 மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இதேபோன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.